Saturday 4 February 2012

நம் தேசத்தந்தை காந்திஜியை, உலக நாடுகள் எந்த அளவுக்கு போற்றியுள்ளன என்பதற்கு, சில உதாரணங்கள்:

* உலக நாடுகளில் அன்டிகுவா முதல், ஜாம்பியா வரை, 120க்கும் மேற்பட்ட நாடுகள், காந்திஜிக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளன; உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத அரிய பெருமை இது!

* இந்தியா தவிர்த்து, மற்ற உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை, 300க்கும் மேல்.

* பிரிட்டிஷ் அரசு, பொதுவாக தன் நாட்டுத் தலைவரைத் தவிர்த்து, வேறு நாட்டுத் தலைவருக்கு அஞ்சல் தலைகளை, 1969ம் ஆண்டுக்கு முன் வெளியிட்டதில்லை. அத்தகைய நிலைப்பாட்டை முதல் முறையாக மாற்றி, காந்திஜிக்காக அஞ்சல் தலையை, அந்த நாடு வெளியிட்டது. பிரிட்டன் அரசின் அஞ்சல் தலைகளில் இடம் பெற்ற, முதல் உலகத் தலைவர் நம் காந்திஜி தான்.

* காந்திஜியின் பிறந்த நாளான அக்., 2ம் தேதியை, 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து, அவரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தது.

* காந்திஜிக்கு இந்தியா மட்டுமில்லாது, 70க்கும் மேற்பட்ட நாடுகள், தம் நாட்டின் முக்கிய இடங்களில் சிலைகளை நிறுவி, அழகு பார்த்துள்ளன.

* இந்தியாவுக்கு அடுத்தப்படியாக, அமெரிக்காவில் தான், காந்திஜிக்கு ஏராளமான அளவில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை, 40ஐத் தாண்டும். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், காந்திஜி தன் வாழ்நாளில், ஒரு முறை கூட அமெரிக்கா சென்றதில்லை

No comments:

Post a Comment